ஷஷாங்க் சிங் 2024 ஐபிஎல் தொடரில் 354 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி 44.25 என்பதாக இருந்தது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 164.65 என்பதாக இருந்தது. தான் சிறப்பாக ஆடியது குறித்து ஷஷாங்க் சிங் ஒரு பேட்டியில் பேசியபோது தோனி சொன்ன அறிவுரை ஒன்றை தான் பின்பற்றியதாகவும், அதனாலேயே தன்னால் அதிரடியாக ஆட முடிந்ததாகவும் அவர் கூறினார்.

அது பற்றி ஷஷாங்க் சிங் கூறியதாவது – “ஒரு முறை நான் மஹி பாயுடன் (தோனியுடன்) பேசினேன். அப்போது நான் ஃபினிஷர் ஆக இருப்பது குறித்து கேட்டு இருந்தேன். அதற்கு பதில் அளித்த தோனி, “நீ ஆடும் பத்து போட்டிகளில் உனது அணியை மூன்று முறை வெற்றி பெற வைத்தால் உலகின் 5 அல்லது 10 சிறந்த வீரர்களில் நீயும் ஒருவராக இருப்பாய்” என்று கூறினார். அது எனக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்தது.”

“ஒவ்வொரு போட்டியிலும் நாம் வெற்றி பெற முடியாது என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டேன். எனவே, நாம் விளையாடியதில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள முயன்றேன். சில முட்டாள்தனமான விஷயங்களை நான் கை விட்டேன். நான் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நிறைய நுணுக்கமான விஷயங்களை மேம்படுத்த பயிற்சி செய்தேன்.” என்றார் ஷஷாங்க் சிங்.

2025 ஐபிஎல் தொடர் குறித்து பேசுகையில், “நான் இன்னும் (பஞ்சாப் அணியின்) புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை சந்திக்கவில்லை. ஆனால், அவருடன் தொடர்பில் இருக்கிறேன். பேட்டிங்கை பொறுத்தவரை நான் புல் ஷாட் மட்டும் ஹூக் ஷாட் அடிப்பதற்காக பயிற்சி செய்து வருகிறேன். ரிவர்ஸ் ஸ்வீப்புகளை செய்து வருகிறேன்.” இவ்வாறு ஷஷாங்க் சிங் கூறினார்.